ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது

🕔 January 12, 2019

வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில், இளைஞர்கள் இருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று வைள்ளிக்கிழமை கைது செய்தனர்.

நாவற்குடா பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் , 23 வயதுடைய இரு இளைஞர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று வெள்ளிக்கிழமை தமிழர்கள் தரப்பில் ஹர்த்தால் மேற்கொள்ளும் முயற்சி நடைபெற்றது.

இதற்காக காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகாமையில் நேற்று காலை நடு வீதியில் டயர் போடப்பட்டு எரிக்கப்பட்டது

இதனையடுத்து வீதியில் டயர் போட்டு எரித்த குற்றச்சாட்டு தொடர்பில், பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய மேற்படி இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் .

Comments