ஹிஸ்புல்லாவின் இடத்துக்கு சாந்த பண்டாரவை நியமித்து, வர்த்தமானி பிரசுரம்

🕔 January 7, 2019

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சாந்த பண்டாவின் பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்கும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது நாடாளுமன்ற உறுப்புரிமையினை ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த சாந்த பண்டார, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலே குருணாகல் மாவட்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் பின்னர் சிறிது காலம் ஊடகத்துறைப் பிரதியமைச்சராகப் பதவி வகித்த சாந்த பண்டார, கடந்த வருடம் மே மாதம் அரச மரக் கூட்டுத்தபானத் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் 1972ஆம் ஆண்டு பிறந்தவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்