சம்மாந்துறை சரித்திரம் நூல்; தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் வெளியீடு

🕔 January 1, 2019

– எம்.வை.அமீர், யூ.கே. காலித்தீன் –

டொக்டர் எம்.எம். மீராலெப்பை அவர்கள் எழுதிய ‘சம்மாந்துறை சரித்திரம்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட கலை அரங்கில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் இந்நூலை பதிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் மேன்பாட்டு மையத்தின் தலைவர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின் வழிகாட்டுதலில், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எல்.பௌசுல் அமீர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

‘சம்மாந்துறை சரித்திரம்’ எனும் நூலின் அறிமுக உரையை மட்டுமல்லாது நூலின் பதிப்பாசிரியரான பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்கள் பல்கலைக்கழகத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றியுள்ள பணிகள் பற்றி பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்கள் அச்சொட்டாக எடுத்துரைத்தார்.

நூல் பற்றிய நயவுரையை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. ரகுபரன் நிகழ்த்திய அதேவேளை நிறைவுரையை பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் நிகழ்த்தினார்.

நிகழ்வில் ‘சம்மாந்துறை சரித்திரம்’ நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதருக்கு, பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல் பொன்னாடை போர்த்தியதுடன் பிரதம அதிதி உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நினைவுச்சின்னம் வழங்கி வழங்கி வைத்தார்.

பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறையின் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸிலின் நன்றியுரையுடன் நிறைவுற்ற குறித்த நிகழ்வில், சம்மமாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பேராசிரியர்கள் கலாநிதிகள் கல்வியாளர்கள் சமூக தலைவர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்