ஹக்கீமுக்கு பட்டாசு வெடிக்க, நீர்வழங்கல் அதிகார சபை ஊழியர்களிடம், அக்கரைப்பற்றில் பணம் வசூல்

🕔 December 30, 2018

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, அதனைக் கொண்டாடும் வகையில் பட்டாசு கொழுத்துவதற்காக, நீர்வழங்கல் அதிகார சபையில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்களிடம் பணம் அறவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த மு.காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவரே, இவ்வாறு பணம் வசூலித்துள்ளார்.

நீர் வழங்கல் அதிகாரசபையின் அக்கரைப்பற்றுக் காரியாலயத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் மூலம், மேற்படி மு.கா. முக்கியஸ்தர் இவ்வாறு பணம் அறவிட்டதாக தெரியவருகிறது.

சிலரிடம் இவ்வாறு 10 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாத பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை, பணம் கொடுப்பதற்கு மறுத்த சிலர், தொழில் ரீதியாக பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என, அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அறவிடப்பட்ட பணத்தைக் கொண்டு, அக்கரைப்பற்றில் கடந்த 20ஆம் திகதி பட்டாசு கொழுத்தி, மேற்படி பிரமுகரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments