ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்: துமிந்த திஸாநாயக்க

🕔 December 25, 2018

க்கியதேசிய கட்சியில் ஒருபோதும் தான் இணையப்போவதில்லை என  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஏற்பட்டுள்ள புதிய நட்பு குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்;

“சுதந்திரக் கட்சி தாய் வீடு, அது அனைவரையும் அரவணைக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை விமர்சித்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து கொண்டுள்ளார்கள் ” எனவும கூறினார்.

“அவர்கள் புதிய கட்சியில் இணைந்து கொண்டமை குறித்து தற்போது கேட்டால் அவர்கள் மௌனமாக இருக்கின்றனர். அவர்கள் தற்போது தாங்கள் ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என தெரிவிக்கின்றனர். முழுநாடும் அவர்கள் வேறு கட்சியில் இணைத்து கொண்டதை பார்த்தது. நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments