ஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல்

🕔 December 19, 2018

– முன்ஸிப் அஹமட் –

பிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது தாக்குதல் மேற்கொண்டவர் எனக் கூறப்படும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.என். பர்ஸான் என்பவர், தான் தாக்குதல் மேற்கொண்டமையைக் ஏற்றுக் கொண்டதோடு, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாட்டினை மீளப் பெறுமாறும் ஊடகவியலாளர் ஹமீட்டிடம் கேட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஹமீட்டின் தொலைபேசிக்கு அழைத்து நீண்ட நேரம் பேசிய பர்ஸான் என்பவர், தான் தாக்குதல் மேற்கொண்ட போது, தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீரின் மருமகன் பர்ஸான் என்பவர் தன்னைத் தாக்கியதாக, பிராந்திய ஊடகவியலாளர் ஹமீட்  கடந்த சனிக்கிழமை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்.

அதே இரவு, அட்டாளைச்சேனை வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக ஹமீட் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், தன்னைத் தாக்கிய நபர் பர்ஸான் என்பவர், தொலைபேசி வழியாகத் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், அந்த உரையாடலை – தான் ஒலிப்பதிவு செய்ததாகவும் தெரிவிக்கும் ஊடகவியலாளர் ஹமீட்; அந்த ஒலிப்பதிவை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைத்தார்.

அந்த உரையாடலை நாம் இங்கு தருகின்றோம்.

தொடர்பான செய்தி: ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு

தொலைபேசி உரையாடல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்