பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு

🕔 December 14, 2018

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக, அவரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்குநாளை உரையாற்றிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வார் என, நாமல் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்கால தடையுத்தரவொன்றினைபிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 03ஆம் திகதி இந்த இடைக்கால தரையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரம் இல்லை எனத் தெரிவித்து,  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி இடைக்காலத் தடையினை விதித்தது.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையினை நீக்குமாறு, மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் விடுக்கப்பட்டகோரிக்கையினை, உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளார் என, அவரின் புதல்வர் அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்