நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்குத் தீர்ப்பு: இன்று பிற்பகல் வழங்கப்படுகிறது

🕔 December 13, 2018

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை பி.பகல் 4.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை பிரதம நீதியரசர் உள்ளிட்ட 07 நீதியரசர் குழாம் 
விசாரித்தது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட 13 தரப்புக்கள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தன.

நொவம்பர் 09ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நொவம்பர் 12ஆம் திததி  இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடையினை நீதிமன்றம் விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்