அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி

🕔 December 4, 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஒரு வாரத்துக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்தாலும், ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அவர் தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு, இன்று மாலை கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

அதில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே, மேற்படி விடயங்களை ஜனாதிபதி கூறினார்.

ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு பொருத்தமற்ற ஓர் அரசியல்வாதி என்றும், ஜனாதிபதி மைத்திரி இதன்போது தெரிவித்தார்.

“பிரச்சினையை நான் உருவாக்கவில்லை,  ரணில் விக்ரமசிங்கவே உருவாக்கினார். எனவே இந்த நிலைமையை மாற்றுவதற்கு நான் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்”.

“நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளையும், ஐக்கிய தேசிய கட்சியை​யும் ரணில் சீரழித்தார்; அவர் என்னையும் சீரழித்தார். அதனால்தான் பிரதமர் பதவியிலிருந்து அவரை துரத்தினேன்” எனவும் ஜனாதிபதி கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்