பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு

🕔 December 4, 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரமராக்குவதற்கு ஜனாதிபதி மீண்டும் முயற்சி எடுத்து வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மையினைக் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை பிரதம மந்திரியாக நியமிக்க ஜனாதிபதி மறுப்புத் தெரிவிப்பதற்கு, எந்தவிதமான காரணங்களும் இல்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இயங்க முடியாது என்று, நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியதை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் எனும் வகையில் வழங்கப்பட்ட பாதுகாப்புகள் நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, அவரின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நடந்து கொண்டமை போன்று, மஹிந்த விடயத்திலும் நடக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்