வடக்கு முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக, வவுனியாவில் துண்டுப் பிரசுரம்

🕔 December 3, 2018

டக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. விக்னேஷ்வரனுக்கு எதிராக நேற்று வவுனியாவில் துண்டுப் பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டது.

தாண்டிக்குளம் மற்றும் வவுனியா நகர் பகுதியில் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விக்னேஷ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன ஒன்றிணைந்து வவுனியாவில் நேற்று பொதுக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே, அவருக்கு எதிரான இந்தத் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டன.

‘பாதிக்கப்பட்ட வன்னி மக்கள்’ எனும் பெயரில் வெளியாகியுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில், விக்னேஷ்வரன் முதலமைச்சராக இருந்த போது, அபிவிருத்திப் பணிகளை வேண்டுமென்றே தடுத்ததாகவும், வவுனியா மாவட்டத்தைப் புறக்கணித்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மக்களின் நலனைப் புறக்கணித்து, சிங்களவர்களுக்குச் சார்பாக விக்னேஷ்வரன் நடந்து கொண்டார் என்றும், குறித்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் சுவாமி பிரேமானந்தாவின் சீடன் எனவும், விக்னேஷ்வரனை அந்தத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்