த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை

🕔 November 29, 2018

மிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், அந்தக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை.

சமகால அரசியல் குறித்து ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு இன்றைய தினம் எழுதிய கடிதத்தில், அந்தக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கையொப்பமிட்டிருந்தனர்.

16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் கட்சியினர் எழுதிய கடிதத்தில், சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் கையொப்பம் இடவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு அண்மையில் அணி மாறி, பிரதியமைச்சுப் பதவியினைப் பெற்றுக் கொண்டார்.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், அண்மைக்காலமாக கட்சியுடன் முரண்படும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திக்கு: ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்