மஹிந்தவுக்கு பிறந்த நாள்; வாழ்த்துச் சொன்னார் மு.கா. தலைவர்

🕔 November 18, 2018

ன்று ஞாயிற்றுக்கிழமை தனது 73ஆவது பிறந்த நாளை கொண்டாடிய, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிக்கையில்; “மஹிந்த ராஜபக்ஷவுக்கு சம்பிரதாயபூர்வமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பின்னர், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சுமூகமாக தீர்ப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன்” என்றார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டி எனும் பிரதேசத்தில் பிறந்த மஹிந்த ராஜபக்ஷ, 1970ஆம் ஆண்டு தனது 25ஆவது வயதில் முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றார்.

அரசியலில் நீண்டகால அனுபவங்களைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, 2004ஆம் ஆண்டு, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியின் போது, பிரதமராகப் பதவி வகித்தார்.

இதன் பின்னர் 2005 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.

எவ்வாறாயினும், தனது பதவிக் காலம் முடிவதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்திய அவர், அதில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்