மாலைதீவு தேர்தல்: எதிரணைி வேட்பாளர், இப்ராஹிம் வெற்றி

🕔 September 24, 2018

மாலைதீவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது சோலீப் வெற்றி பெற்றதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்றாஹீமுடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹீம், 1,34,616 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. யாமீன் 96,132 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்தியாவும் அமெரிக்காவும் இந்த முடிவுகளை வரவேற்றுள்ளன.

அதிகாரப்பூர்வ முடிவுகள் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியிடப்படும். ஆனால், அதற்கு முன்னதாகவே இப்ராஹீமின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி, அதிபர் அப்துல்லாவுக்கு, இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

“மாலத்தீவில் உள்ள மக்களுக்கு, மாற்றம், அமைதி மற்றும் நீதி வேண்டும் என்று இதிலிருந்து நன்றாக தெரிகிறது” என தலைநகர் மேலில் செய்தியாளர்களிடம் பேசிய இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்னொரு தடவையும், வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட யாமீன், வெளிப்படையாக தேர்தல் முடிவு குறித்து இன்னும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Comments