முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

🕔 June 8, 2018

கில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், கடந்த பொதுத் தேர்தலில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக, மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் வாக்குறுதியளித்திருந்தார்.

இதனை நிறைவேற்றும் வகையிலேயே, இஸ்மாயிலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மக்கள் காங்கிரஸ் வழங்கியுள்ளது.

Comments