எம்.பி.யாக நாடாளுமன்றம் வருவேன் என்கிறார் மஹிந்த

🕔 August 19, 2015
Mahinda - 002ரசியலில் தொடர்ந்தும் செயற்படப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, தான் – நாடாளுமன்றத்துக்குச் செல்வுள்ளதாகவும் அவர் கூறினார்.

தனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு அமைவாகவே – இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தது. இந்த சவால்களுக்கு மத்தியில் கிடைத்துள்ள பெறுபேற்றினை ஏற்றுக்கொள்கிறோம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு  மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்” என்றார்.

இதேவேளை, நாட்டுக்காக செய்த சேவைகளை, தொடர்ந்தும் முன்னெடுக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்துக்குச் செல்லவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை எதிர்பார்த்து இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவர் சார்பான ஐ.ம.சு.முன்னணி இந்தத் தேர்தலில் ஆட்சியமைக்கும் வகையிலான ஆசனங்களைப் பெற முடியாமல் தோல்லியடைந்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் பதவி கிடைக்காமல் விட்டால், மஹிந்த ராஜபக்ஷ – சாதாரணமான ஒரு உறுப்பினராக நாடாளுமன்றம் செல்வாரா எனும் சந்தேகமொன்று அரசியல் அரங்கில் இருந்து வந்தது.

இந்த நிலையிலேயே, தான் – நாடாளுமன்றம் செல்வேன் என – மஹிந்த அறிவித்துள்ளார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்