மு.கா. தலைவர் ஹக்கீம் பெரு வெற்றி; ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள்

🕔 August 18, 2015

Hakeem - 0123ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரஊப் ஹக்கீம், நடந்து முடிந்த தேர்தலில், 01 லட்சத்து 02 ஆயிரத்து 186 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கடந்த 2010 ஆண்டு பொதுத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாகப் போட்டியிட்ட மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் 54,047 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை மு.கா. தலைவர் ஹக்கீம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை நடைபெற்று முடிந்த பொது தேர்தலில்,  ஐ.தே.கட்சி சார்பாக, கண்டி மாவட்டத்தில் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகிய இரு முஸ்லிம் வேட்பாளர்களே போட்டியிட்டனர். அந்தவகையில், மேற்படி இருவரும் வெற்றியீட்டியுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில், ஐ.தே.கட்சி 44,0761 வாக்குகுகளைப் பெற்று (55.57%) 07 ஆசனங்களையும், ஐ.ம.சு.முன்னணி 30,9152 வாக்குகள் (38.98%) 05 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

இதேவேளை, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இவ்வாறானதொரு தொகை விருப்பு வாக்குகளை தனக்கு வழங்கி வெற்றிபெறச் செய்த – கண்டி மாவட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அமைவதற்கு ஒத்துழைத்த அனைத்து வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தனது பேஷ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்