கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை

🕔 December 5, 2017

வேறொரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக சுதந்திரக் கட்சி நிறுத்தியுள்ளமையானது, வரலாற்றில் முதற்டவையாகும் என்றும், சிறப்புக்குரியது எனவும் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்;

தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளராக நான் பதவி வகிக்கின்றபோதும், ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சியினுடைய மத்திய குழுவின் பூரண சம்மத்துடன் கொழும்பு மாநகரசபையின் மேயர் வேட்பாளராக நான் நிறுத்தப்படவுள்ளேன்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் கலப்புமுறை என்பதால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விட்டு மேயர் பதவியை என்னால் ஜெயிக்கமுடியும். ஐக்கிய தேசியக் கட்சியின்மேயர் வேட்பாளரான ரோசி சேனநாயக்காவுக்கு கிறிஸ்தவ வாக்குகள் கிடைக்கும்.

எனினும் எனக்கு மூவின மக்களின் வாக்குகளும் கிடைக்கும். அதனால் கொழும்பு மேயர் வேட்பாளராக என்னால் ஜெயிக்க முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்