அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; சபாநாயகரிடம் சமர்ப்பித்தது ஒன்றிணைந்த எதிரணி

🕔 November 23, 2017

ள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை, ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை, சபாநாயகம் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளனர்.

சபாநாயகரை அவரின் அலுவலகத்தில் சந்தித்த ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஒரு குழுவினர், மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை ஒப்படைத்தனர்.

இதேவேளை, அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வரவுள்ளதாக, ஜே.வி.பி. இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகின்றமையினால், அதற்குப் பொறுப்பான அமைச்சர் எனும் வகையில், பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவரவுள்ளதாகவும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்