வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக ஹரீஸ் கூறியமை, கட்சியின் நிலைப்பாடல்ல: மு.கா. தலைவர் ஹக்கீம் விளக்கம்

🕔 October 5, 2017

டக்கு கிழக்கு இணைப்பை, தான் எதிர்ப்பதாகவும், கல்முனையை தனி மாவட்டமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறியிருப்பது, அவருடைய சொந்தக் கருத்தாகும் என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று, பிரதியமைச்சர் ஹரீஸ் கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்ததோடு, சில நாட்களுக்கு முன்னர் கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் கூறியிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர்கள் வினவியபோதே, மேற்கண்ட பதிலை மு.கா. தலைவர் வழங்கினார்.

இது தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறிகையில்;

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கு ஒரு போதும் அனுமதியோம் என்று ஹரீஸ் கூறியமை அவரின் சொந்தக் கருத்தாகும். அது கட்சியின் நிலைப்பாடல்ல.

கட்சி மற்றும் ஊர் சார்ந்த உணர்வுகளுடன் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களைக் கூறும்போது, அது வேறு தரப்புக்களுக்கு உந்து சக்தியாக அமைந்து விடும். எனவே, இப்படிக் கூறுவதை தவிர்த்துக் கொள்வது உகந்தது” என்றார்.

நன்றி: தினகரன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்