ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்

🕔 August 10, 2017

வி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பின்னர், இது தொடர்பில் பிரதமரிடம் கூறப்பட்டுள்ளது.

பிணை முறி விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிணை முறி விவகாரம் தொடர்பில் தமக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை இல்லாமல் செய்யும் பொருட்டு, ரவி கருணாநாயக்க பதவி விலகவேண்டும் என்று, ஐக்கிய தேசியக்கட்சியின் கணிசமான உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்