வாழைச்சேனை இளம் கண்டுபிடிப்பாளருக்கு, ஷிப்லி பாறுக் நேரில் வாழ்த்து

🕔 July 31, 2017
– எம்.ரீ. ஹைதர் அலி –

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் எம்.எம். யூனூஸ் கான் எனும் இளம் கண்டு பிடிப்பாளருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாழ்த்துத் தெரிவித்தார்.
யூனூஸ் கானின் இல்லத்திற்கு இன்று திங்கட்கிழமை  சென்ற மாகாணசபை உறுப்பினர், அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புக்களும் மென்மேலும் தொடர வேண்டுமென வாழ்த்தினார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எம்.எம். யூனூஸ் கான்; நெல் விதைக்கும், உரம், எண்ணெய் விசுறும் செயற்பாடுகளைக் கொண்ட இயந்திரமொன்றினை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். 
 
குறித்த இயந்திரம் மூலம், மேற்படி செயற்பாடுகளைத் திறம்பட மேற்கொள்வதோடு, அந்த இயந்திரத்தை தானியக்க கருவியூடாக வயல் வரப்புகளிலிருந்து கொண்டே சிரமமின்றி இயக்க முடியும் என்பதும் சிறப்பம்சமாகும்.

இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் எம்.எம். யூனூஸ் கான், ஓகஸ்ட் மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். இதற்காக,  எதிர்வரும் 08ஆம் திகதி தென் கொரியா நாட்டுக்கு பயணமாகவுள்ளார்.

இச்சந்திப்பில், கல்குடாத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். திபாஸ் உள்ளிட்ட சிலரும் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்