பத்திரிகை விளம்பரமொன்று இனவாதத்தைத் தூண்டுகிறதாம்: பொதுபல சேனா பொலிஸில் முறைப்பாடு

🕔 June 29, 2017

நாட்டில் இல்லாத இனவாதம் மற்றும் மதவாதம் தொடர்பில் பொய்யான தகவல்களை உள்ளடக்கி, புரவெசி பலய அமைப்பு விளம்பரம் வெளியிட்டுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வைத் தூண்டி, அதன் ஊடாக பிரபலமடைவதற்கு குறித்த அமைப்பு முயற்சிப்பதாகவும் பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.

பத்திரிகை ஒன்றில் புரவெசி பலய மற்றும் நீதியான சமூகத்துக்குரிய அமைப்பு இணைந்து விளம்பரமொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் தொடர்பிலேயே, பொதுபல சேனா முறைப்பாடு செய்துள்ளது.

இந்த விளம்பரமானது, முழுக்கவும் இனவாதத்தைத் தூண்டும் வகையிலானது என, பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து பிரபல்யம் அடையும் நோக்கில் இவ்வாறான போலி விளம்பரங்கள் வெளியிடப்படுவதாகவும் பொதுபல சேனா குற்றம்சாட்டியுள்ளது.

எனவே, குறித்த விளம்பரத்தினை வெளியிட்ட அமைப்புக்கு எதிராக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முறைப்பாட்டில் பொதுபல சேனா கோரியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்