கல்முனை ஸாஹிராவின் அதிபராக மீண்டும் பதுறுதீன்; சர்ச்சைக்கு முடிவு கிட்டியது

🕔 May 24, 2017

– யூ.கே. காலித்தீன் –

ல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபராக மீண்டும் பீ.எம்.எம். பதுறுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயினும், இவர் இன்று புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக பாடசாலை சென்ற போது, அங்கு சர்ச்சையொன்று ஏற்பட்டது.

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் பீ.எம்.எம். பதுறுதீன்   இன்று புதன்கிழமை காலை, பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்க சென்ற போது, தற்காலிக அதிபர் – கடமைகளைப் பொறுப்பளிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதன் காரணமாக அங்கு சிறு பதற்ற நிலையும் தோன்றியது.

இதன் காரணமாக, கல்முனை வலையக் கல்விப் பணிப்பாளருக்கு பதுறுதீன் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்முனை வலையக் கல்விப் பணிப்பாளர்களால் இன்று நண்பகல் இரு அதிபர்களும் கல்முனை வலையக் கல்விப் பணிமனைக்கு அழைக்கப்பட்டனர்.

ஆயினும், தற்காலிக அதிபர் இக்கலந்துரையாடலுக்கு  சமூகமளிக்கவில்லை. இந் நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பீ.எம்.எம். பதுறுதீனுக்கு, கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராக கடமைப் பொறுப்பேற்கும்படி, கல்முனை வலையக் கல்விப் பணிப்பாளர் உத்தியோகபூர்வ கடிதத்தினை வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்