இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ்

🕔 May 16, 2017
– அகமட் எஸ். முகைடீன் –

சாய்ந்தமருதிலிருந்து அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாயலத்தை, மீண்டு சாய்ந்தமருதுக்குக் கொண்டு செல்லுமாறு, பிரதமர் காரியலாயம் உத்தரவிட்டுள்ளது.

பிரமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சீனா சென்றுள்ள மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மேற்படி காரியாலயம் இடம்மாற்றப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, பிரதமர் காரியாலயத்தினூடாக இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

சாய்ந்தமருதிலிருந்து அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாயலத்தை, மீண்டு சாய்ந்தமருதுக்குக் கொண்டு வரும்பொருட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசுமாறு, மு.கா. தலைவரிடம் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது பிரதமருடைய அமைச்சின் கீழ் வருகின்றமையினால், குறித்த மாகாண காரியாலயத்தை மீண்டும் சாய்ந்தமருதுக்கு கொண்டுவருவது தொடர்பாக மிகுந்த அழுத்தத்துடன் கூடிய வற்புறுத்தலாக பிரதமருடன் பேசுமாறு மு.கா. தலைவரிடம் பிரதியமைச்சர் ஹரீஸ் வேண்டிக் கொண்டார்.

சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வது தொடர்பாக பேசிவருகின்ற பிரதமர், சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்த ஒரு மாகாண காரியாலயத்தை, பெரும்பான்மை மக்கள் வாழும் அம்பாறை நகருக்கு மாற்றிய விடயத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும் இதன்போது ஹரீஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சீன விஜயத்தின்போது பிரதமருடன் தானும் செல்வதனால், குறித்த விடயம் தொடர்பாக, அச்சந்தர்ப்பத்தில் பேசுவேன் என்று, அமைச்சர் றவூப் ஹக்கீம் பிரதி அமைச்சரிடம் உறுதியளித்தார்.

அதற்கமைவாக பிரதமரிடம் சீனாவில் வைத்து, தான் அழுத்தமாக தெளிவுபடுத்தி பேசியிருப்பதாக அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக தற்போது அவ்வலுவலகம் மீண்டும் சாய்ந்தமருதில் இயங்குவதற்கான உத்தரவுகள் பிரதமரின் அலுவலகத்தின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம் என, பிரதியமைச்சர் ஹரீஸ் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்