கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு

🕔 December 15, 2016
dcc-meeting-trinco-022– எம்.ரீ. ஹைதர் அலி –

திருமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான கட்டட நிர்மாணத்தினை நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்படி சட்ட விரோதக் கட்டடம் தொடர்பில் சுட்டிக்காட்டி பேசினார்.

இதன்போதே, சட்ட விரோத கட்டட நிர்மாணத்தினை நிறுத்தும்படி, திருகோணமலை மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சீனக்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஆகியோருக்கு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.

திருமலை மாவட்டத்தின், கிண்ணியாவின் புதிய நீண்ட பாலம் அமைக்கப்படுவதற்கு முன்னர், பிரதேச மக்கள் கிண்ணியா துறையடியினூடாக படகு சேவையை  பயன்படுத்திக் கொள்வதற்காக, வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இடத்தில், கடந்த சில வாரங்களாக சட்ட விரோதமான முறையில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. புத்தர் சிலை வைக்கும் நோக்கில்  இந்த கட்டடம் நிர்மாணிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான பகுதியில் சட்ட விரோதமாக கட்டிடம் அமைக்கப்படுவதாக, திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,  இன்ற நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் பேசுகையில்; நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வது பொருத்தமற்றது என்று கூறினார். மேலும், கிண்ணியா வீதியில் அமைந்துள்ள வரவேற்பு கோபுரத்தில் முஸ்லிம்களின் கலாசார சின்னங்கள் பிரதிபலிக்கக் கூடாது என்று, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் – அதிகாரிகளும் தடுத்து நிறுத்தியமை நியாயமானது என்றால், குறித்த சட்ட விரோத கட்டடத்தில் சிலை வைப்பு எந்த விதத்தில் நியாயமாகும் என்று கேள்வி எழுப்பினார்.

இதன்போது திருகோணமலை மாவட்டத்துக்குப் பொறுப்பான  வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியலாளரிடம், குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வேண்டப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட கட்டட நிர்மாண வேலைகளை உடன் நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்,  திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சீனக்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.
dcc-meeting-trinco-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்