ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு

🕔 November 26, 2016

shibly-farook-09– எம்.ரீ. ஹைதர் அலி –

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ரஹ்மத் நகர் – ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஒலிபெருக்கி சாதனங்களை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கினார்.

மாகாணசபை உறுப்பினரின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000 ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

மேலும், ரஹ்மத் நகரில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மலசலகூட வசதி இல்லாமையினாலும், போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியாமல் வீதிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவற்றை புனர்நிர்மானம் செய்து தருமாறும் அக்கிராம மக்கள் சார்பாக ரஹ்மத் நகர்-  ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் என்.எம். ஹயாத்து முஹம்மது கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

இதற்கிணங்க, எதிர்காலத்தில் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு இக்கிராமத்திலுள்ள மக்களின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்துதருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

Comments