வரவு – செலவு திட்ட விவாதம்: போட்டுத் தாக்கினார் மஹிந்த

🕔 November 16, 2016

mahinda-at-parliament-099ரவு – செலவுத் திட்ட யோசனையில் வௌிநாட்டவர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ள அரசாங்கம், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வௌிநாட்டவர்களுக்கான வரிகளை நீக்கி அவர்களை ஊக்குவித்து, வசதியான முறையில் நாட்டில் இடங்களை கொள்வனவு செய்யவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இடமளித்துள்ளதாக மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிப்படைய செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வருமான வரியை 12 வீதத்தில் இருந்து 28 வீதமாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய அவர், 85 வீதமான மக்களிடம் இருந்து மறைமுக வரிகளை அறவிட, இந்த வரவு – செலவுத் திட்டம்   எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்