சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும், உயர் தரம் பயிலலாம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

🕔 September 21, 2016

Agilaviraj kariyavasam - 014ல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாது விட்டாலும், உயர்தரக்கல்வியை மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.

2018 ஆம் ஆண்டிலிருந்து இத் தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

இதன்மூலம் சாதாரணத்தரத்தில் தோல்வியடைந்தவர்களும் தமக்கு விருப்பமான பாடத்தை உயர்தரத்தில் பயிலமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை காரணமாக, சாதாரணத்தரத்தில் தோல்விக்கண்டவர்களின் திறமைகளுக்கு இடமளிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்