திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள்

🕔 September 17, 2016

soundarya-011னது தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளிக்குமாறு, நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது புதல்வி சௌந்தர்யாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வேண்டுகோளினை அவர் விடுத்திருக்கின்றார்.

ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தெரிவிக்கப்படுகின்றமை போல், தனது திருமண வாழ்வு விவாகரத்தை நோக்கிச் செல்கின்றமையினை அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.

‘எனது திருமண முறிவு குறித்து வெளியான செய்திகள் உண்மைதான். கடந்த ஒரு வருடமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம். விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. எனது தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’  என்று, தனது ட்விட்டர் பக்கத்தில் சௌந்தர்யா கூறியுள்ளார்.

சௌந்தர்யாவுக்கும் இந்திய தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஓர் மகன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.soundarya-022

Comments