றிசாத், ஹக்கீமை உள்ளடக்கி அமைச்சரவை உபகுழு; ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வுகாண நடவடிக்கை

🕔 August 9, 2016

Risahd+ Hakeem - 012லுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்புக்கு தீர்வுகளைக் காணும் பொருட்டு, அமைச்சரவை உபகுழுவொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

தற்காலிகத்  தீர்வொன்றை அவசரமாகக் காணவும், பின்னர் நிலையான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, குறித்த உபகுழுவினை ஜனாதிபதி நியமித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்படி குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மீன்பிடித் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சர்களான றிசாத் பதியுதீன் மற்றும் ரஊப் ஹக்கீம் ஆகியோர், குறித்த குழுவில் இடம்பெறுகின்றனர்.

ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினர் விரைவில் கூடி, நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்