பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது

🕔 June 9, 2016

Arrest– எப். முபாரக் –

ள்ளிவாசல் ஒன்றின் சிபாரிசு கடிதம் எனக் கூறப்படும் போலியான கடிதங்களைக் காட்டி, பணம் வசசூலித்த சந்தேக நபர் ஒருவரை, நேற்று புதன்கிழமை மாலை கந்தளாய் பொலிஸார் கைது செய்தனர்.

மன்னார் வீதி, புத்தளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், புத்தளம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாயல் ஒன்று வழங்கியதாகக் கூறி, போலியான கடிதமொன்றி தயாரித்து, அதனைக் காட்டி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கந்தளாய் நகரிலும் இவர் பொதுமக்களிடம் பணம் சேகரித்து வந்தபோது, கடைக்காரர் ஒருவருக்கு குறித்த நபரின் கடிதத்தின் மேல் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து, கடைக்காரர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் வைத்திருந்த கடிதத்தில் தொலைபேசி இலக்கங்கள் எவையும் இல்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இன்று வியாழக்கிழமை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்