காவலரைக் கட்டிப்போட்டு விட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கம்பளையில் சம்பவம்

காவலரைக் கட்டிப்போட்டு விட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கம்பளையில் சம்பவம் 0

🕔25.Jan 2023

வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று கம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கம்பளை கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.ரி.எம் இயந்திரமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த நால்வர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளர். வேன் ஒன்றில் வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த காவலாளியை கட்டி போட்டுவிட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை

மேலும்...
நாடாளுமன்றுக்கு ஏ.எச்.எம். பௌஸி: வர்த்தமானி அறிவிவித்தல் வெளியானது

நாடாளுமன்றுக்கு ஏ.எச்.எம். பௌஸி: வர்த்தமானி அறிவிவித்தல் வெளியானது 0

🕔25.Jan 2023

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து – வெற்றிடமாகியுள்ள இடத்துக்கு பெளஸி இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில், மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில், மு.கா பிரமுகர் இணைவு

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில், மு.கா பிரமுகர் இணைவு 0

🕔25.Jan 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் உறுதிமொழி பிரகடனமும் நேற்று (24) இரவு அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. கணக்காய்வு உத்தியோகத்தர் ஏ.ஜி. முபாறக் தலைமையில் நடைபெற் ற இந்த நிகழ்வில், வட்டாரங்களில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் பட்டியல் வேட்பாளர்கள் 05

மேலும்...
13 அமுல்படுத்தப்படும் முயற்சிகள் நடைபெறுவதால், முஸ்லிம் தலைமைகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் நஸீர் அஹமட்

13 அமுல்படுத்தப்படும் முயற்சிகள் நடைபெறுவதால், முஸ்லிம் தலைமைகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் நஸீர் அஹமட் 0

🕔24.Jan 2023

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால்,  இது குறித்து, முஸ்லிம் தலைமைகள்  கூடிய கவனம் எடுக்க வேண்டும் என  சுற்றாடல் அமைச்சர் நஸீர்  அஹமட் தெரிவித்துள்ளார். இத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால், முஸ்லிம்கள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து – முஸ்லிம் தலைமைகள் விலகி நிற்கக்கூடாது என்றும் அமைச்சர் நஸீர்

மேலும்...
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: ஓய்வுபெற்ற மேஜருக்கு 04 வருட சிறை

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: ஓய்வுபெற்ற மேஜருக்கு 04 வருட சிறை 0

🕔24.Jan 2023

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் இன்று (24) இந்த தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 03 லட்சம் ரூபா அபராதமும் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஜனவரியில்,

மேலும்...
இலங்கையில் 81 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல்

இலங்கையில் 81 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல் 0

🕔23.Jan 2023

மனித நடவடிக்கைகளால் நாட்டில் மொத்தம் 81 பறவை இனங்கள் ‘அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக’ பட்டியலிடப்பட்டுள்ளனதாக, சுற்றுச்சூழல் அமைச்சின் பல்லுயிர் பெருக்க செயலக பணிப்பாளர் திருமதி ஆர்.எச்.எம்.பி. அபேகோன் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிற தரவுப் புத்தகத்துக்காக, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது, ‘முக்கியமாக அழிந்து வரும்’ (CR), ‘அழிந்து வரும்’ (EN),

மேலும்...
அரச அலுவலர்களின் சம்பள தினத்தில் மாற்றம்

அரச அலுவலர்களின் சம்பள தினத்தில் மாற்றம் 0

🕔23.Jan 2023

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கான தற்காலிக நாட்களை நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி நிறைவேற்று தரமற்ற அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் 2023 ஜனவரி 25 ஆம் திகதி வழங்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிறைவேற்று தர அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் ஜனவரி 26 ஆம் திகதி அன்று

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அரச ஊழியர்கள்: என்ன காரணம்?

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அரச ஊழியர்கள்: என்ன காரணம்? 0

🕔23.Jan 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கணிசமான அரச ஊழியர்கள் பின்வாங்கியுள்ளனர். தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்கிற பேச்சுகள் பரவலாக உள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் – சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதால், சில வேளைகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமாயின்,

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர்கள் முறையற்ற ரீதியில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர்கள் முறையற்ற ரீதியில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2023

– அஹமட் – கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் – முறையற்ற ரீதியில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. மௌலானா இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தென்கிழக்கு கரையோர பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் ஒருவர், கிழக்கு மாகாண வீதிப்

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம், இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம், இன்றுடன் நிறைவு 0

🕔23.Jan 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைவாக இந்தத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு இன்று நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க முடியும். 28 மாநகர சபைகள், 36

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்