துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி: இன்று பதிவான இரண்டாவது சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி: இன்று பதிவான இரண்டாவது சம்பவம் 0

🕔31.Aug 2022

பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக 28 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பதிவான 2வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். சம்பவத்தில் காயமடைந்த நபர் – பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். நீதிமன்றுக்கு முன்பாக நீர்கொழும்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி விபத்தில் சிக்கி பலி: திருணமாகி 03 மாதங்களேயான நிலையில் சோகம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி விபத்தில் சிக்கி பலி: திருணமாகி 03 மாதங்களேயான நிலையில் சோகம் 0

🕔31.Aug 2022

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தனது கணவருடன் மோட்டார் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியொருவர், வீதி விபத்தொன்றில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று புதன்கிழமை காலை, நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதான வீதியில் பல்கலைக்கழத்துக்கு அருகாமையிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் உடல், பிரேத பரிசோதனையின் பின்னர்

மேலும்...
தாமரைக் கோபுரம் 15ஆம் திகதி திறக்கப்படுகிறது: அனுமதிச் சீட்டுப் பெற்று பொதுமக்களும் பார்வையிடலாம்

தாமரைக் கோபுரம் 15ஆம் திகதி திறக்கப்படுகிறது: அனுமதிச் சீட்டுப் பெற்று பொதுமக்களும் பார்வையிடலாம் 0

🕔31.Aug 2022

தாமரைக் கோபுரம் எதிர்ரும் செப்டம்பர் 15ஆம் திகதி திறக்கப்படும் என, ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. உள்நாட்டவர்கள் 500 ரூபாய்க்கு சாதாரண அனுமதிச் சீட்டை வாங்குவதன் மூலமும், 2000 ஆயிரம் ரூபாவுக்கு வேகமான நுழைவுச் சீட்டை (fast pass) பெற்றுக் கொள்வதன் மூலமும் கோபுரத்துக்குள் நுழைய முடியும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் 20

மேலும்...
மஹிந்தவின் வீட்டை புனரமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: வெளியான தகவலுக்கு ரணில் பதில்

மஹிந்தவின் வீட்டை புனரமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: வெளியான தகவலுக்கு ரணில் பதில் 0

🕔31.Aug 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை புனரமைக்க, அரச நிதியில் இருந்து 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (310 நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, இன்று சபையில் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை நிராகரித்தார். “மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு 0

🕔31.Aug 2022

அரச பாடசாலைகள் இரண்டாந்தவணை விடுமுறைக்காக செப்டம்பர் 07ம் திகதி மூடப்படவுள்ளன. இந்தக் காலத்துக்கான பாடசாலை விடுமுறை நாட்கள் செப்டம்பர் 8 தொடக்கம் 12 வரை 05 நாட்களைக் கொண்டதாக இருக்கும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 13ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும். தற்போது முதலாந் தவணைக்கான பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும்...
மைத்திரியின் மகனுக்கு சுந்திரக் கட்சியில் புதிய பதவி

மைத்திரியின் மகனுக்கு சுந்திரக் கட்சியில் புதிய பதவி 0

🕔31.Aug 2022

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளருமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவுக்கு கட்சியில் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை – பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பேரவையின் தலைவராக அவர் பதவி வகித்தார்.

மேலும்...
சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவர் கோர்பச்சேவ் மரணம்

சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவர் கோர்பச்சேவ் மரணம் 0

🕔31.Aug 2022

சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் மிகையீல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் ரஷ்யாவில் காலமானார். சோவியத் ஒன்றியத்தில் நிலவிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியவர், அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்குமான பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர், கம்யூனிஸ்ட் நாடுகளின் தொகுப்பை முன்னின்று நடத்தியவர் என, இவருக்கு பல அடையாளங்கள் உள்ளன. 1985ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பதவிக்கு வந்த இவர்,

மேலும்...
பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணில் இணைவு

பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணில் இணைவு 0

🕔31.Aug 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில்  இணைந்துள்ளனர். இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான ஜி.எல். பீரிஸ், இன்று (31) நாடாளுமன்றில் அறிவித்தார். இதன்படி, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகபெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல்

மேலும்...
இடைக்கால வரவு – செலவுத் திட்டம்: சுருக்கமாக அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

இடைக்கால வரவு – செலவுத் திட்டம்: சுருக்கமாக அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔30.Aug 2022

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை இன்று (30) நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் சமர்ப்பித்ததோடு, பல திட்டங்களையும் முன்மொழிந்தார். இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும், அவை இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் முன் மொழிவுகள் வருமாறு; * 2021ல் மொத்த

மேலும்...
வெளித் தொடற்பற்று வாழ்ந்த, உலகின் கடைசி ‘குழி மனிதன்’ மரணம்: இவரின் பழங்குடி இனத்தில் இனி யாரும் இல்லை

வெளித் தொடற்பற்று வாழ்ந்த, உலகின் கடைசி ‘குழி மனிதன்’ மரணம்: இவரின் பழங்குடி இனத்தில் இனி யாரும் இல்லை 0

🕔30.Aug 2022

வெளி உலகத் தொடர்பில்லாத, பிரேசிலின் பழங்குடியொன்றைச் சேர்ந்த கடைசி நபர் மரணமடைந்தார். இந்தத் தகவலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கடந்த 26 ஆண்டுகளாகப் பெயர் தெரியாத அந்த மனிதர், பிறருடன் எந்தத் தொடர்புமின்றித் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவர் ‘குழி மனிதன்’ என்று அழைக்கப்பட்டார். காரணம் விலங்குகளைப் பிடிக்கவும் தான் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொள்ளவும் என

மேலும்...
பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சை ஏற்கத் தயார்: தம்மிக பெரேரா

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சை ஏற்கத் தயார்: தம்மிக பெரேரா 0

🕔30.Aug 2022

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான அவர் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே, தம்மிக பெரேரா இதனைக்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரியுண்ட வீடுகளைத் திருத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை, மாணவர்களின் மதிய உணவுக்கு ஒதுக்குங்கள்: சஜித்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரியுண்ட வீடுகளைத் திருத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை, மாணவர்களின் மதிய உணவுக்கு ஒதுக்குங்கள்: சஜித் 0

🕔30.Aug 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீவைத்து நாசமாக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 40,000 மில்லியன் ரூபாவை 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கான அவசர போஷாக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (29) உரையாற்றிய அவர்; இலங்கையில் சிறுவர் போசாக்கு குறைபாடு தொடர்பில் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில்

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது 0

🕔30.Aug 2022

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியமை தொடர்பில் மூன்று நபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மே 10 ஆம் திகதி கொழும்பு – பெரஹெர மாவத்தையில் தனிநபர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் சிறு காயங்களுக்கு

மேலும்...
இடைக்கால வரவு – செலவுத் திட்டம்; சபையில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது: பாதுகாப்புக்கும் அதிக நிதி ஒருக்கீடு

இடைக்கால வரவு – செலவுத் திட்டம்; சபையில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது: பாதுகாப்புக்கும் அதிக நிதி ஒருக்கீடு 0

🕔30.Aug 2022

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை இன்று (30) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார. 4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதனையடுத்து, பிற்பகல் 02 மணிவரை நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி உரையாற்றுவார். அதனையடுத்து, நாளை வரை

மேலும்...
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக பிரச்சினைகள்; வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு: பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஜனா எம்.பி தெரிவிப்பு

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக பிரச்சினைகள்; வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு: பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஜனா எம்.பி தெரிவிப்பு 0

🕔29.Aug 2022

கல்முனை வடக்கு (தமிழ்ப் பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை தானும் நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசனும் சந்தித்து கலந்தரையாடிய வேளையிலேயே இதனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்