எரிபொருள் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டால் ‘ஜெனரேட்டர்’ பயன்படுத்த வேண்டும்: இல்லையென்றால் முறைப்பாடு செய்யலாம்

எரிபொருள் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டால் ‘ஜெனரேட்டர்’ பயன்படுத்த வேண்டும்: இல்லையென்றால் முறைப்பாடு செய்யலாம் 0

🕔25.Jul 2022

– முன்ஸிப் அஹமட் – மின்சாரத் தடை ஏற்படும் போது – எரிபொருள் நிலையங்களில் கட்டாயமாக மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் மின்சாரத் தடை ஏற்படும் போது, அதிகமான எரிபொருள் நிலையங்களில் மின்பிறப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் இலங்கை

மேலும்...
இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக திரெளபதி முர்மூ பதவியேற்பு

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக திரெளபதி முர்மூ பதவியேற்பு 0

🕔25.Jul 2022

இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மூ (64 வயது) இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழா இன்று காலை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை திரெளபதி முர்மூ பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
அட்டாளைச்சேனை ‘ஹஃபா’ எரிபொருள்  நிலையத்தில் முறைகேடு என பொதுமக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு: பிரச்சினை முற்றியதால் கூச்சல், குழப்பம்

அட்டாளைச்சேனை ‘ஹஃபா’ எரிபொருள் நிலையத்தில் முறைகேடு என பொதுமக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு: பிரச்சினை முற்றியதால் கூச்சல், குழப்பம் 0

🕔25.Jul 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை ‘ஹஃபா’ எரிபொருள் விற்பனை நிலையத்தில், எரிபொருள்களை வழங்குவதில் பல்வேறு மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்ததையடுத்து, இன்று (25) காலை – குறித்த எரிபொருள் நிலையம் முன்பாக பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. நீண்ட நாட்களின் பின்னர் ‘ஹஃபா’ எரிபொருள் விற்பனை நிலையத்துக்கு டீசல் கிடைத்துள்ள நிலையில், அவற்றினை விவசாயிகளுக்கு

மேலும்...
ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களை, விற்க முயன்ற மூவர் கைது

ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களை, விற்க முயன்ற மூவர் கைது 0

🕔25.Jul 2022

கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திரை அணிகலன்களாக பயன்படுத்தப்பட்ட 40 தங்க முலாம் பூசப்பட்ட செப்பு உருண்டைகளைத் திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆக்கிரமித்ததன் பின்னர், சந்தேகநபர்கள் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு 0

🕔25.Jul 2022

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த மனு இன்று (25) கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா முன்னிலையில் விசாரனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவருக்கு

மேலும்...
அட்டாளைச்சேனை அல் முனீறா வித்தியாலய ஆரம்ப பிரிவுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திலிருந்த மின் விசிறிகள் களவு

அட்டாளைச்சேனை அல் முனீறா வித்தியாலய ஆரம்ப பிரிவுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திலிருந்த மின் விசிறிகள் களவு 0

🕔24.Jul 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்கென பாவங்காய் வீதியை அண்மித்து நிர்மாணிக்கப்பட் வகுப்பறைக் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறிகள் களவாடப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த 06 மின் விசிறிகள் களவாடிச் செல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் தரப்

மேலும்...
கோட்டாவை உடனடியாகக் கைது செய்யுமாறு, சிங்கப்பூர் சட்ட மா அதிபரிடம் சர்வதேச அமைப்பு முறைப்பாடு

கோட்டாவை உடனடியாகக் கைது செய்யுமாறு, சிங்கப்பூர் சட்ட மா அதிபரிடம் சர்வதேச அமைப்பு முறைப்பாடு 0

🕔24.Jul 2022

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு கோரி, சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (International Truth and Justice Project) சட்டத்தரணிகள் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றப் புகார் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது,

மேலும்...
நிமல் கையூட்டல் கோரினாரா: விசாரணை மேற்கொள்ள குழு நியமனம்

நிமல் கையூட்டல் கோரினாரா: விசாரணை மேற்கொள்ள குழு நியமனம் 0

🕔23.Jul 2022

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூவரடங்கிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார். அமைச்சரவை அமைச்சர் ஒருவர், ஜப்பானின் தயிஸே நிறுவனத்திடம் கையூட்டல் கோரியதாக, சமூக வலைத்தளங்கள் உட்பட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, இந்த

மேலும்...
தேசிய எரிபொருள் அனுமதி திட்டம் 25 மாவட்டங்களிலும் சோதனை

தேசிய எரிபொருள் அனுமதி திட்டம் 25 மாவட்டங்களிலும் சோதனை 0

🕔23.Jul 2022

தேசிய எரிபொருள் அனுமதி திட்டம் (National Fuel Pass program) 25 மாவட்டங்களிலும் இன்று (23) தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சோதனை செய்யப்படவுள்ளது. “தேசிய எரிபொருள் அனுமதிச் இன்று கொழும்பில் 02 இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தத் திட்டம் 25 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை சோதனை செய்யப்படும். சோதனை

மேலும்...
ஐ.தே.கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ஐ.தே.கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔22.Jul 2022

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக வஜிர அபேவர்தன பதவி வகிக்கின்றார். காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட வஜிர அபேவர்தன, கடந்த

மேலும்...