‘கட்டார் சரிட்டி’ மீதான தடையை நீக்க இலங்கை தீர்மானம்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

‘கட்டார் சரிட்டி’ மீதான தடையை நீக்க இலங்கை தீர்மானம்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔30.Jun 2022

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் ‘கட்டார் சரிட்டி’ (கத்தார் அறக்கட்டளை) என்ற தொண்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ‘ட்விட்டர்’ மூலம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டார் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் கஞ்சன,  நேற்று (29)

மேலும்...
முஸ்லிம் பெண் அரச ஊழியர்களுக்கான ‘இத்தா’ காலத்துக்குரிய விடுமுறை இல்லாமல் செய்யப்பட வேண்டும்: ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி பரிந்துரைப்பு

முஸ்லிம் பெண் அரச ஊழியர்களுக்கான ‘இத்தா’ காலத்துக்குரிய விடுமுறை இல்லாமல் செய்யப்பட வேண்டும்: ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி பரிந்துரைப்பு 0

🕔29.Jun 2022

அரச சேவையிலுள்ள முஸ்லிம் பெண்களின் கணவர்மார் மரணிக்கும் போது, முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படும் 04 மாதங்கள் 10 நாள் (இத்தா காலம்) இல்லாமல் செய்யப்பட வேண்டுமென, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி, இன்று ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, மத வேறுபாடுகள் இன்றி – கணவர் அல்லது மனைவி மரணிக்கும்

மேலும்...
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்; ஒருவர் பலி: 500 பேர் தப்பியோட்டம்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்; ஒருவர் பலி: 500 பேர் தப்பியோட்டம் 0

🕔29.Jun 2022

பொலன்னறுவை – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். புனர்வாழ்வு பணியக ஆணையாளரின் கீழுள்ள கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், சுமார் ஆயிரம் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலுக்கு மத்தியில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலைமையைக்

மேலும்...
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் இறுதி அறிக்கை; முஸ்லிம் உறுப்பினர்கள் மூவர் கையெழுத்திடாத நிலையில், ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் இறுதி அறிக்கை; முஸ்லிம் உறுப்பினர்கள் மூவர் கையெழுத்திடாத நிலையில், ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔29.Jun 2022

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை, கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணியினர், ஜனாதிபதியிடம் இன்று (29) கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் திகதி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவி காலம் நிறைவடைந்திருந்த நிலையில், அதன் இறுதி அறிக்கை  ஜனாதிபதியிடம்

மேலும்...
கிழக்கு ஆளுநர் மற்றும் கல்வி அதிகாரிகள் கண்மூடித்தனமாக செயற்படுவதாக, இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கிழக்கு ஆளுநர் மற்றும் கல்வி அதிகாரிகள் கண்மூடித்தனமாக செயற்படுவதாக, இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔29.Jun 2022

ஆசிரியர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதில் பாராமுகமாக செயற்படும் கல்வியமைச்சின் ஆலோசனைகளை, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்; பரீட்சைத் திணைக்கள ஆணையாளரால் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான அனுமதிக் கடிதம் வழங்கியும் எதுவும்

மேலும்...
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை தயார்; ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்காக காத்திருக்கிறோம்: ஞானசார தேரர் தெரிவிப்பு

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை தயார்; ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்காக காத்திருக்கிறோம்: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔29.Jun 2022

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களாலும் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும், அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிப்பதற்கான திகதியும் நேரமும் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். “அநேகமாக இன்று (29) நியமனம் உறுதி செய்யப்படும்” என்றும் அவர் நேற்று (28) தெரிவித்தார். ஜனாதிபதி

மேலும்...
நாடு முழுவதும் வீதிகளில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் போராட்டத்துக்கு அழைப்பு

நாடு முழுவதும் வீதிகளில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் போராட்டத்துக்கு அழைப்பு 0

🕔28.Jun 2022

நாட்டில் நாளை (29) புதன்கிழமை வீதிகளில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக, அது குறித்து அழைப்பு விடுத்து வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த போராட்டம் குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் – தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.

மேலும்...
கட்டார் எரிசக்தி அமைச்சருடன், காஞ்சன பேச்சுவார்த்தை

கட்டார் எரிசக்தி அமைச்சருடன், காஞ்சன பேச்சுவார்த்தை 0

🕔28.Jun 2022

கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அந்நாட்டின் எரிசக்தி விவகார ராஜாங்க அமைச்சர் சாட் ஷெரிடா அல் காபியை இன்று (28) சந்தித்தார். அரசுடைமையான கட்டார் எனர்ஜி மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன், இலங்கை எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பெற்றோலிய உற்பத்திகள், இயற்கை திரவ எரிவாயு (LNG)

மேலும்...
இலங்கையருக்கு கற்கை நெறிகளை மேற்கொள்ள, இந்திய அரசு வழங்கும் ஆயுஷ் புலமைப்பரிசில்

இலங்கையருக்கு கற்கை நெறிகளை மேற்கொள்ள, இந்திய அரசு வழங்கும் ஆயுஷ் புலமைப்பரிசில் 0

🕔28.Jun 2022

ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2022 – 23 கல்வியாண்டில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு / பட்டப் பின்படிப்பு /கலாநிதி ஆகிய கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது. இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் திறமைவாய்ந்த

மேலும்...
05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்களும் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லலாம்:  அமைச்சரவை தீர்மானம்

05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்களும் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லலாம்: அமைச்சரவை தீர்மானம் 0

🕔28.Jun 2022

வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான ‘குடும்பப் பின்னணி அறிக்கை’ சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவை இல்லை என, அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது குறித்த நிபந்தனையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில்; வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்

மேலும்...