தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு 0

🕔27.Aug 2021

தனிமைப்படுத்தல் ஊடரடங்குச் சட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் செயலணிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (27) நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை, நாடு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மேலும்

மேலும்...
காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி 0

🕔26.Aug 2021

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பலியானவர்களின் விவரத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக எந்த தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை,

மேலும்...
பாடகர் இராஜை தாக்கியதாக வெளியான செய்தி: மறுக்கிறார் பிரதமரின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ

பாடகர் இராஜை தாக்கியதாக வெளியான செய்தி: மறுக்கிறார் பிரதமரின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ 0

🕔26.Aug 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பிரதமரின் பணியாட் தொகுதியின் தலைமையதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ தாக்கியமையினாலேயே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல பாடகர் இராஜ் வீரரட்ன ராஜிநாமா செய்தார் எனப் பரவும் தகவலை யோஷித ராஜபக்ஷ மறுத்துள்ளார். இராஜ் வீரரத்னவை யோஷித தாக்கியதாகவும், இதனாலேயே இராஜ் – தேசிய இளைஞர்

மேலும்...
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு 0

🕔26.Aug 2021

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைவதைக் காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ‘ஃபைசர்’ தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களிடம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு ஒரு மாத காலத்தில் 88 சதவீதமாக இருந்தது. இது ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74 சதவீதமாக குறைந்திருக்கிறது. ‘ஆஸ்ட்ராசெனீகா’ தடுப்பூசியை செலுத்திக்

மேலும்...
வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை

வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை 0

🕔26.Aug 2021

ஒன்லைன் வீடியோ விளையாட்டுக்கு (video game) அடிமையான சிறுவன் ஒருவரிடமிருந்து, கைத்தொலைபேசியை பறித்து எடுத்ததால், சம்பந்தப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மாத்தறை – ரொட்டும்ப பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரே, அவரின் தாய் – கைப்பேசியை பறித்து எடுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியிலுள்ள பல

மேலும்...
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் ஒசாமாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை: தலிபான் தெரிவிப்பு

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் ஒசாமாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை: தலிபான் தெரிவிப்பு 0

🕔26.Aug 2021

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லையென தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

மேலும்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன? 0

🕔26.Aug 2021

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது இம்மாதம் 30ஆம் திகதிக்கு மேல் நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.  இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
பகிடிவதை தொடர்பில் சட்டச் சீர்திருத்தம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

பகிடிவதை தொடர்பில் சட்டச் சீர்திருத்தம்: கல்வி அமைச்சு அறிவிப்பு 0

🕔25.Aug 2021

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும்  வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் பல்கலைக்கழக அதிகாரிகளால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலை இருந்ததாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன 0

🕔25.Aug 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (25) தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் விஷேட உரையின் போதே அவர் இந்த தகவலைக் கூறினார். அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 365

மேலும்...
இலங்கையில் ‘காட்போட்’ சவப்பெட்டி: 4500 ரூபா விலையில் விற்பனை

இலங்கையில் ‘காட்போட்’ சவப்பெட்டி: 4500 ரூபா விலையில் விற்பனை 0

🕔25.Aug 2021

இலங்கையில் ‘காட்போட்’ இனால் உருவாக்கப்பட்ட சவப் பெட்கள் சந்தைக்கு வந்துள்ளன. இந்த சவப்பெட்டியின் விலை 4500 ரூபாவாகும். நாட்டில் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழைகள் குறைந்த விலையில் இந்த சவப்பெட்டிகளைக் கொள்வனவு செய்யக் கூடியதாக உள்ளது. தெஹிவளை – கல்கிஸ்ஸ நகர சபை உறுப்பினர் பிரியந்த சஹபந்துவின் யோசனையில் உருவான இந்த சவப்பெட்டிக்கான தயாரிப்பு

மேலும்...