பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2020 -2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு ஆண்டுக்குரிய விண்ணப்பத் திகதி இம்மாதம் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இம்மாதம் 11ஆம் திகதி, விண்ணப்ப முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி: வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக

மேலும்...
வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக பிரகடனம்

வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக பிரகடனம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி

மேலும்...
சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன

சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன

நாட்டுக்கு மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி தொடக்கம் இதுவரை மொத்தம் 3.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெற்றுள்ளது. கொவிட்

மேலும்...
பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது

பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது

பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அந்த நாட்டின் ஜனாதிபதியை நபரொருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஊடகங்களில் பரவி வருகிறது. வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி சீனாவுக்கு எதிரானதல்ல: நாடாளுமன்றில் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி சீனாவுக்கு எதிரானதல்ல: நாடாளுமன்றில் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி – சீனாவுக்கு எதிரானது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். தமது கட்சி இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதே தவிர சீனாவுக்கு எதிரானதல்ல எனவும் அவர் கூறினார். “நாங்கள் சில நாடுகளுக்கு எதிரானவர்கள் என்று சிலர் கருதுகிறார்கள். சீன அரசாங்கம், இந்தியா அல்லது அமெரிக்காவுக்கு நாம்

மேலும்...
கல்முனையில் மாணவன் கடலில் மூழ்கி மரணம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது பரிதாபம்

கல்முனையில் மாணவன் கடலில் மூழ்கி மரணம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது பரிதாபம்

– நூருள் ஹுதா உமர் – நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் நேசமணி அக்ஸயன் (வயது 17) இன்று செவ்வாய்கிழமை மாலை கல்முனைக்கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.

மேலும்...
ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார்

ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறு நடைபெறவில்லை. இதேவேளை, இம்மாதம் (ஜுன்) மூன்றாம் வாரமளவில் அவர் நாடாளுமன்றம் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப்பட்டியல்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுத்து வைக்கும் இடம்: ஜனாதிபதி அறிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுத்து வைக்கும் இடம்: ஜனாதிபதி அறிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்படுவோர், தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாக கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் 9 ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதன்படி, பயங்கரவாத தடை

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து, தபால் மூலம் மருந்துகளைப் பெறலாம்: அத்தியட்சகர் அறிவிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து, தபால் மூலம் மருந்துகளைப் பெறலாம்: அத்தியட்சகர் அறிவிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொற்றா நோய்களுக்கான ( NCD) கிளினிக் சிகிச்சை பெறுவோர், தற்போதைய சூழலில் தமக்கான மருந்துகளை வைத்தியசாலையில் இருந்து தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என, வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, 07.11.2020 தொடக்கம் 07.03.2021 வரை தொற்றா நோய்களுக்கான கிளினிக் சிகிச்சை பெறுவோருக்கு, கொவிட் 19

மேலும்...
போகோ ஹராம்  தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல்

போகோ ஹராம் தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல்

நைஜீரியாவைத்  தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் (Boko Haram) அமைப்பின் தலைவர் அபூபக்கர் ஷேகாவ் குண்டை வெடிக்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கின்றன. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் அமைப்பு 2002ஆம் ஆண்டு நைஜீரியாவின் போர்னோ மாநிலத் தலைநகரான

மேலும்...