ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என ஆசாத் சாலி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும்...
ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை

ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நாடு இழந்தால், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 300 ரூபாவாக மாறும் எனவும் முன்னாள் பிரதமரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே ஜிஎஸ்பி பிளஸ் விடயத்தை அரசியல்மயமாக்கி தூக்கி வீச வேண்டாம் என்றும்

மேலும்...
உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

உரம் பொதியிடப்பட்ட 50 பைகளை (Bags) திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பிரதேசத்தில் உள்ள விவசாயத் திணைக்கள அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த உரப்பைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக, மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தர் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் வாரியபொலவில் உள்ள தனது தனிப்பட்ட இடத்தில் மேற்படி

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும் என்றும், அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ரத்துச் செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில்

மேலும்...
வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்;  துபாயில் வசிக்கும் இலங்கையர் பின்னணியில்: விசாரணை ஆரம்பம்

வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்; துபாயில் வசிக்கும் இலங்கையர் பின்னணியில்: விசாரணை ஆரம்பம்

வெலிகம கடற் பகுதியில் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட பெருமளவிலான ஹெரோயின் போதைப் பொருளை அனுப்பியதன் பின்னணியில், துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் உள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிகம கடற்கரையில் 219 கிலோகிராம் ஹெராயின் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்ததது. இந்த கடத்தல் தொடர்பாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆறு சந்தேக நபர்கள்

மேலும்...
இஸ்ரேலில் புதிய ஆட்சி; நெஃப்தலி பென்னெட் பிரதமரானார்: பெஞ்சமின் நெதன் யாஹுவின் பதவி பறிபோனது

இஸ்ரேலில் புதிய ஆட்சி; நெஃப்தலி பென்னெட் பிரதமரானார்: பெஞ்சமின் நெதன் யாஹுவின் பதவி பறிபோனது

இஸ்ரேலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து அந்த நாட்டில் ஆட்சியெொன்றை அமைத்துள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக ‘நெஃப்தலி பென்னெட்’ பதிய பிரதமராக நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுள்ளார். இதனால், 12 வருடங்களாக பிரதமராக இருந்து வந்த பெஞ்சமின் நெதன்யாஹுவின் பதவி பறிபோயுள்ளது. இஸ்ரேலில் 2009, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கம் பெஞ்சமின் பிரதமராக இருந்து வந்தார். அங்கு

மேலும்...
எரிபொருள் விலையேற்றம்; பொதுஜன பெரமுனவின் அறிக்கை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே சவால் விடுகிறது: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

எரிபொருள் விலையேற்றம்; பொதுஜன பெரமுனவின் அறிக்கை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே சவால் விடுகிறது: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

எரிபொருள்களின் விலை உயர்வுக்கான தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட து என, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவரின் அமைச்சில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார். எரிபொருள் விலை உயர்வுக்கு அமைச்சரைக் குற்றம் சாட்டி பொதுஜன பெரமுன விடுத்த அறிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்; “நிதியமைச்சர் மஹிந்த

மேலும்...
நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 07 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அதிகார சபை இந்த வர்த்மானி அறிவித்தல்ளை வெளியிட்டுள்ளது அரிசி தயாரிப்பாளர், நெல் ஆலை உரிமையாளர்கள் ,

மேலும்...
1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது

1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது

வெலிகம பகுதிக்கு அருகில் பெரிய மீன்பிடி படகு ஒன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். எரிபொருள் சிலிண்டர்கள் மற்றும் பொதிகளில் அடைக்கப்பட்டு மேற்படி ஹெரோயின் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது கைப்பற்றப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கடற்படை,

மேலும்...
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு

எரிபொருள்களுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமையினை அடுத்து, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தமை தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலக வேண்டும் என்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றினூடாக

மேலும்...