தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து குடித்த ராஜாங்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு
ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இவர் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டமையினை அடுத்து, கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ராஜாங்க அமைச்சரின் பணியாளர்கள் 10 பேருக்கு, சுய தனிமையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கேகாலையில் நடைபெற்ற ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்,