நாடாளுமன்றம் மூடப்பட்டது: ஊழியர்களுக்கும் அனுமதியில்லை

நாடாளுமன்றம் மூடப்பட்டது: ஊழியர்களுக்கும் அனுமதியில்லை

நாடாளுமன்றத்தை இரண்டு நாட்களுக்கு மூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று திங்கட்கிழமையும் நாளையும் நாடாளுமன்றம் மூடப்படவுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் கிருமி தொற்று நீக்கப்படவுள்ளமையினால் ஊழியர்களை சேவைக்கு சமூகமளிக்கு வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன் கிழமை நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், அன்றை தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டால்

மேலும்...
நாட்டில் கொரோனாவினால் 16ஆவது நபர் மரணம்

நாட்டில் கொரோனாவினால் 16ஆவது நபர் மரணம்

நாட்டில 16ஆவது கொரோனா மரணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபர் கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்தவராவார். இதேவேளை, நேற்று இரவு 11 மணி வரையிலான தகவல்களின் படி, நாட்டில் இதுவரை 7,872

மேலும்...
20க்கு ஆதரவளித்த அரவிந்த குமாருக்கு, அவரின் கட்சி தடை விதிப்பு: 14 நாட்களுக்குள் விளக்கமளிக்கவும் அவகாசம்

20க்கு ஆதரவளித்த அரவிந்த குமாருக்கு, அவரின் கட்சி தடை விதிப்பு: 14 நாட்களுக்குள் விளக்கமளிக்கவும் அவகாசம்

– க. கிஷாந்தன் – மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்குவதற்கும், அவர் வழங்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மலையக

மேலும்...
கிழக்கில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று; கல்முனை பிராந்தியத்தில் 09 பேர் பாதிப்பு

கிழக்கில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று; கல்முனை பிராந்தியத்தில் 09 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார். “இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 09 பேரும், அம்பாறையில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கல்முனைப் பிராந்தியத்தில் – கல்முனைக்குடியில் 03 பேரும்

மேலும்...
கொரோனாவினால் 15ஆவது நபர் மரணம்; பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 07 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவினால் 15ஆவது நபர் மரணம்; பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 07 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நபரொருவர் இன்று சனிக்கிழமை மரணமாகியுள்ளார். இதன்படி, மொத்தமாக 15 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது. இன்று உயிரிழந்தவர் குளியாப்பிட்டி – உனலீய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவராவார். இவர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்

மேலும்...
தலைவரின் ஆசீர்வாதத்துடனேயே, 20க்கு ஆதரவாக வாக்களித்தோம்: மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிப்பு

தலைவரின் ஆசீர்வாதத்துடனேயே, 20க்கு ஆதரவாக வாக்களித்தோம்: மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிப்பு

– சர்ஜுன் லாபீர் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய விருப்பத்தினையும், ஆசீர்வாதத்தினையும் பெற்ற பின்னரே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தாம் வாக்களித்ததாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தத்துக்கான வாக்களிப்பு நடைபெற்ற பின்னர், முகநூல் பக்கமொன்றுக்கு பேட்டியளித்த போதே, அவர் இதனைக் கூறினார். “உங்கள்

மேலும்...
த.மு.கூட்டணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்: மனோ கணேசன் அதிரடி

த.மு.கூட்டணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்: மனோ கணேசன் அதிரடி

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமது பங்காளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த குமாரை, தமது கூடட்ணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேவேளை இன்றைய தினம் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு – இது தொடர்பில் ஆராயும் என்றும், அதன் பின்னர்

மேலும்...
20ஆவது திருத்தம்; 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில், 19 பேர் எதிர்ப்பு; 09 பேர் ஆதரவு

20ஆவது திருத்தம்; 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில், 19 பேர் எதிர்ப்பு; 09 பேர் ஆதரவு

நாடாளுமன்றிலுள்ள 28 தமிழ் உறுப்பினர்களில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக 09 பேரும், எதிராக 19 பேரும் வாக்களித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (10), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (02), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (01), தமிழ் முற்போக்குக் கூட்டணி (அரவிந்குமார் தவிர 05 பேர்) ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின்

மேலும்...
இருபதை ஆதரித்த டயனாவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: ஐக்கிய மக்கள் சக்தி

இருபதை ஆதரித்த டயனாவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: ஐக்கிய மக்கள் சக்தி

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே என்பவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரேயொரு நாடாமன்ற உறுப்பினரே வாக்களித்திருந்தார். குறித்த உறுப்பினரான டயனா கமகே,

மேலும்...
பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை, இணைய வழியில் நடத்துவதற்கு நடவடிக்கை

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை, இணைய வழியில் நடத்துவதற்கு நடவடிக்கை

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் (Online) விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில், இணையவழி பரீட்சைகளை நடத்துவதற்கான தினங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றார். தற்சமயம் பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகள் இணையவழி மூலம் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும்

மேலும்...