ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம்

ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில், ஊவா மாகாணத்துக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ராஜா கொலுரே, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த மாற்றத்துக்கான காரணம் குறித்து ஜனாதிபதி

மேலும்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை காலை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ரணில் விக்ரமசிங்க ஆஜரானார். பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி

மேலும்...
சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை

சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சோகா மல்லி’ என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைவாக நீதியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை நீதியமைச்சு நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித்

மேலும்...
நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன்

நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன்

பழையவர்கள்தான் எம்.பி.யாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
குரானை எரித்தமைக்கு எதிராக: சுவீடனில் கலவரம்

குரானை எரித்தமைக்கு எதிராக: சுவீடனில் கலவரம்

சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக நடந்த அந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டது. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மீது போராட்டக்காரர்கள்

மேலும்...
ஈசி கேஷ் ஊடாக ஹெரோாயின் வியாபாரம்; பல்கலைக்கழக மாணவன் கைது

ஈசி கேஷ் ஊடாக ஹெரோாயின் வியாபாரம்; பல்கலைக்கழக மாணவன் கைது

ஈசி கேஷ் (Easy Cash) ஊடாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் பலாங்கொட பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தபோது, ஹங்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுவரும் இளைஞன் என்பது தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் 500 மில்லிகிராம்

மேலும்...
கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன்

கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன்

– முன்ஸிப் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தேசியக் கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும் தரித்து நிற்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தண்டம் விதிக்கும்பொருட்டு, குறித்த மாடுகளைக் கைப்பற்றும் திடீர் நடவடிக்கையொன்றினை அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா இன்று சனிக்கிழமை இரவு மேற்கொண்டார். தேசிய கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும்

மேலும்...
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் மூலம், 13ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா; நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் மூலம், 13ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா; நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் துணைப் பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்துக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை மாற்றுவது குறித்தும் அமைச்சர்கள் கவனம் செலுத்தவில்லை என

மேலும்...
‘கடமை நிறைவேற்று அதிபர்’ விவகாரம்; அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் அநீதி: பணிப்பாளர் கவனிப்பாரா?

‘கடமை நிறைவேற்று அதிபர்’ விவகாரம்; அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் அநீதி: பணிப்பாளர் கவனிப்பாரா?

– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதிபர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பலர் இருக்கத்தக்கதாக, சில பாடசாலைகளுக்கு ‘கடமை நிறைவேற்று அதிபர்களாக’ ஆசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து புகார்கள் எழுந்துள்ளன. அதிபர் தரப் பரீட்சைகளில் சித்தியடைந்து, பாடசாலைகளில் அதிபர்களாகக் கடமையாற்றுவதற்கான தகைமை உள்ளவர்கள் பலர், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ளனர். ஆயினும், அங்கு அதிபர்கள் வெற்றிடமுள்ள

மேலும்...
மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படுமெனவும் அவர் கூறினார். இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர்

மேலும்...