கொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்

கொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் மரணம் இன்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. அங்கொடையிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார். இவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கொரோனா தொற்றினால், கடந்த 25ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சுவிஸர்லாந்தில் மரணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
போதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு

போதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு

– எம்.எஸ்.எம். நூர்தீன் – அத்தியவசியப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றி வந்த தனது லொறியின் சாரதியும் உதவியாளர்களும், போதைப் பொருட்களை வைத்திருந்த கீழ்தரமான செயலுக்கும் தனக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது என்று, அந்த லொறியின் உரிமையாளரான காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மக்பூல் ஹாஜியார் தெரிவித்தார். அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றுக் கொண்டு

மேலும்...
கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

நாட்டில் இன்று சனிக்கிழமை (மாலை 4.00 மணி வரை) கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 04 புதிய நோயாளர்கள் அடையாளம காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் இருவர் சமீபத்தில் இந்தியாவின் சென்னையில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய

மேலும்...
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் 09 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் இதுவரையில் (சனிக்கிழமை காலை

மேலும்...
அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தையும் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி

அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தையும் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி

அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட நபரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் குறித்த இருவருக்கும் காணப்பட்டுள்ளன. இதனால் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் மூலம் களுத்துறை – நாகொடை வைத்தியசாலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துபாய் நாட்டில் இரண்டு நாட்கள்

மேலும்...
கொரோனா தொற்று; அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாகியது அமெரிக்கா: சீனா குறித்து ட்ரம்ப் மீண்டும் சந்தேகம்

கொரோனா தொற்று; அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாகியது அமெரிக்கா: சீனா குறித்து ட்ரம்ப் மீண்டும் சந்தேகம்

கொரோனா நோய் தொற்றினால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸினால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைகழகத்தின் சமீபத்திய தரவின் படி, கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனா மற்றும் இந்த தோற்றால் பேரழிவைச் சந்தித்த இத்தாலி உள்ளிட்ட நாடுகளை விடவும், அமெரிக்காவில் இதுவரை 85 ஆயிரத்துக்கும்

மேலும்...
அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது

அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது

– கனகராசா சரவணன் – கொழும்பில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்துக்கு அத்தியவசிய பொருட்களைக் கொண்டு சென்ற லொறியிலிருந்து ஜஸ் போதைப் பொருள், கஞ்சா, மற்றும் ஹரோயின் ஆகியவற்றினை இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றிய வாழைச்சேனைப் பொலிஸார்; லொறியின் சாரதி உள்ளிட்ட மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர். கொழும்பில் அத்தியவசிய பொருட்களை நேற்று வியாழக்கிழமை ஏற்றிக் கொண்டு

மேலும்...
பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா தொற்று: அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் யார்?

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா தொற்று: அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் யார்?

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் தடவையாகும். பிரிட்டனின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்கா உம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் தன்னை மேட்

மேலும்...
ஒலுவில் துறைமுக பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் அமைக்கப்படும்: கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்

ஒலுவில் துறைமுக பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் அமைக்கப்படும்: கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்

– பாறுக் ஷிஹான் – ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் ஒன்றை  கடற்படையினரின் உதவியுடன் அமைக்கவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இதேவேளை, இப்பகுதியில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு வழிமுறைகளில் விழிப்பூட்டல் மேற்கொண்டு மக்களை

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுவிஸர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இவர் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே, இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளார். இவர் சுவிஸர்லாந்தில் குடியுரிமை பெற்றவராவார்.

மேலும்...