க.பொ.த. சாதாரண பரீட்சைகள் இன்று ஆரம்பம்: சார்க் விளையாட்டில் பங்கு பற்ற சென்றோருக்கு காத்மன்டுவில் விசேட நிலையம்

க.பொ.த. சாதாரண பரீட்சைகள் இன்று ஆரம்பம்: சார்க் விளையாட்டில் பங்கு பற்ற சென்றோருக்கு காத்மன்டுவில் விசேட நிலையம்

க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள்  இன்று ஆரம்பமாகியது. இந்தப் பரீட்சைகள்  எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடையும். இம்முறை நாடளாவிய ரீதியில் 07 லட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 3958 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர்.  பரீட்சைகளை நடத்துவதற்காக 4, 987 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு, 541 ஒருங்கிணைப்பு நிலையங்களும் நிருவப்பட்டுள்ளன. 

மேலும்...
புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை, இன்று நிறைவு

புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை, இன்று நிறைவு

– முன்ஸிப் – சுதந்திர ஊடக இயக்கம் நடத்திய – லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இரண்டு நாட்களைக் கொண்ட மேற்படி பயிற்சிப்பட்டறை, மட்டக்களப்பு க்ரீன் கார்டன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது. லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் புலனாய்வு செய்வதற்கான அறிவினை ஊடகவியலாளர்களுக்கு விருத்தி

மேலும்...
ஜனாதிபதி கோட்டா, 10 நாட்களில் சாதித்தவற்றைப் பட்டியலிட்டு, ஊடகப் பிரிவு அறிக்கை

ஜனாதிபதி கோட்டா, 10 நாட்களில் சாதித்தவற்றைப் பட்டியலிட்டு, ஊடகப் பிரிவு அறிக்கை

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஆட்சிக்கு வந்து 10 நாட்களில் செய்துள்ள பணிகள் என்னென்ன என்று குறிப்பிட்டு, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. ஊடகப் பிரிவின் பிரதி ஊடகப் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதிப்

மேலும்...
முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா

முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா

அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ காரணம் அல்ல என்றும், சிறிலங்கா சுத்திரக் கட்சியே இந்தத் தவறுக்கு காரணம் எனவும், முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது பங்காளிக் கட்சிகளுக்கு அமைர்சர் பதவிகளைப் பங்கிட்டுக் கொடுத்ததாகவும், இதன்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு

மேலும்...
ஏழைகளின் வாழ்வாதார உதவியில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலக ‘கணக்கு வழக்கு’ அதிகாரியின், தொடரும் தில்லு முல்லு

ஏழைகளின் வாழ்வாதார உதவியில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலக ‘கணக்கு வழக்கு’ அதிகாரியின், தொடரும் தில்லு முல்லு

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினூடாக அமுல்படுத்தப்படும், ஏழை மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நடவடிக்கையில் பாரிய மோசடியொன்று மேற்கொள்ளப்படுவதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாக அறியக் கிடைக்கிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக 25 லட்சம் ரூபாவினையும், விளையாட்டுக் கழகங்கள்

மேலும்...
இன, மத வாதங்களை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

இன, மத வாதங்களை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும், அதனை சரி செய்து மீண்டும்  மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம்  என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற பொதுமக்கள், ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். “கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம்

மேலும்...