வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித்

வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித்

நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் இவர் 69,24,255 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அளிக்கப்பட்ட வாக்குளில் 52.25 வீதமாகும். இதேவேளை, மற்றைய பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 55,64,239 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இவர் பெற்ற வாக்கு வீதம் 41.99 வீதமாகும். சிங்கள மக்களின் வாக்குகளைப் பெரும்பான்மையாக கோட்டாபய

மேலும்...
ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு

ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு

இலங்கைக்குப் பொருத்தமற்ற முதலாளித்துவ கொள்கைக்கும், தான் பெரிதும் மதிக்கும் ஜனநாயக சமூகம் மற்றும் சுதேச சிந்தனைக்கும் இடையிலான வேறுபாடே, அரசாங்கத்தில் நிலவிய குழப்பம் உச்ச நிலையை அடைவதற்கு பின்னணியாக அமைந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையிலிருந்து தனது பதவிக் காலத்தின் இறுதி உரையை, நாட்டு மக்களுக்கு நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...
முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல்

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல்

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் – மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக களத்தில் நின்ற எம்.எஸ். முபீஸ் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் மக்களில், கணிசமானோர், யுத்த

மேலும்...
புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு

மன்னார் – தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பஸ்ஸில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் வவுனியாவிலிருந்து

மேலும்...
ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம்

ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம்

– முன்ஸிப் அஹமட் – எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இம்முறை 01 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 096 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை வேளையில் சிறிதளவு மழை செய்த போதும், மக்கள் தொடர்ச்சியாக

மேலும்...
வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்

வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி தேர்தல் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட செயலகங்களுடாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு, அம்பாறை அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து மாவட்ட செயலகத்தின் ஊடாக வாக்குச் சீட்டுப்

மேலும்...
கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு

கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு

கோதுமை மாவுக்கு விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மைகள் இல்ல என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கான குழு மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் ஒப்புதலின்றி கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், தனது ட்விட்டர் பதிவில் நிதியமைச்சர் மங்கள சுட்டிக்காட்டியுள்ளார். கோதுமை மாவுக்கான

மேலும்...
கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்

கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்

பிறிமா கோதுமை மாவுக்கான விலை கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கோதுமை மா விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அதிகரிக்கப்பட்ட விலை ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கு 104.50 சதம் ஆகும். இந்த நிலையில், பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களுக்கான விலையை

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை ‘பெப்ரல்’ (People’s Action For Free and Fair Elections – PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் வன்முறைகளுடன்

மேலும்...
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு: அக்கரைப்பற்றிலிருந்து இன்னுமொரு ஆளுமை

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு: அக்கரைப்பற்றிலிருந்து இன்னுமொரு ஆளுமை

– ஏ.எல். ஆஸாத் – சட்டத்தரணி – பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்து வந்த முஹம்மது அலியார் நவாஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடந்த வாரம் பதவி உயர்வு பெற்றுள்ளார். 35 வருட பொலிஸ் சேவையில் இவர் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக இப்பதவி உயர்வு கிடைத்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் முஹம்மது அலியார், பரீதா

மேலும்...