லஞ்சம், ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை

லஞ்சம், ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை

– அஹமட் – லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறையொன்று, இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது. இரண்டு நாட்களைக் கொண்ட மேற்படி பயிற்சிப் பட்டறையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த – தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர ஊடக இயக்கம் நடத்தும் இந்த பயிற்சிப்பட்டறையில், அதன் தலைவர் சி. தொடாவத்தை,

மேலும்...
என்மீதான எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் உறுதிபடத் தெரிவிப்பு

என்மீதான எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் உறுதிபடத் தெரிவிப்பு

நீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனையினையும் தனக்கு வழங்க முடியாதெனவும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். சிங்கள இலத்திரனிய ஊடகங்களில் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக அபாண்டங்களை பரப்பினாலும் உண்மைகளை பொய்யாக்கி விட முடியாதெனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். வவுனியா சின்ன

மேலும்...
கண்டியில் ‘கிண்டி’யும் கிடைக்காது: எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் மு.கா.வின் நிலை குறித்து, பசீர் எதிர்வு கூறல்

கண்டியில் ‘கிண்டி’யும் கிடைக்காது: எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் மு.கா.வின் நிலை குறித்து, பசீர் எதிர்வு கூறல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் ஒன்றைத்தானும் அந்தக் கட்சி – தம்முடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்கமாட்டாது என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான முன்னணியின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் எதிர்வு கூறியுள்ளார். எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து தோல்வி

மேலும்...
தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்கிறோம்:  இந்திய பிரதமர் தெரிவிப்பு

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்கிறோம்: இந்திய பிரதமர் தெரிவிப்பு

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று, இலங்கையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்தோடு, நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கத் தயார் எனவும் அவர் கூறினார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷயுடன் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது, மாணவர்கள் தாக்குதல்: சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் காடைத்தனம்

பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது, மாணவர்கள் தாக்குதல்: சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் காடைத்தனம்

– ரி. தர்மேந்திரா – சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பரீட்சையினை மேற்பார்வையிட வந்திருந்த அதிகாரிகள் மீது, பரீட்சார்த்தி மாணவர்கள் சிலர், இன்று வெள்ளிக்கிழமை மதியம் நடத்திய தாக்குதலில், அதிகாரிகள் காயமைடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப கல்வி திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, மேற்படி அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய மாணவர்கள் சம்பவ இடத்திலிருந்து

மேலும்...
பதவி விலகுகிறார் தேசப்பிரிய: ஜனாதிபதிக்கு அறிவிப்பு

பதவி விலகுகிறார் தேசப்பிரிய: ஜனாதிபதிக்கு அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய, தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலம் தெரிவித்துள்ளது. சபா நாயகர் கரு ஜயசூரியவிடம் தனது முடிவு குறித்து விளக்கமளித்துள்ளதாக, சபாநாயகரின் அலுவலம் இன்று வெள்ளிக்கிழமை வெளிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. தேர்தல் செயல்பாட்டின் போது அடையாளம் காணப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும்,

மேலும்...
ஊடக அலுவலகத்தில் பொலிஸார் சோதனை

ஊடக அலுவலகத்தில் பொலிஸார் சோதனை

‘நியூஸ் ஹப்’ செய்தி இணைய தள அலுவலகத்தை பொலிஸார் இன்று வியாழக்கிழமை சோதனையிட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் வேட்பாளர் ஒருவரை தோற்கடிக்கச் செய்ய போலிப் பிரசாரங்களை முன்னெடுத்ததாக கூறி, இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற புகாரை அடுத்தே, இந்த சோதனை

மேலும்...
சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம்

சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியொருவர் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை

மேலும்...
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலகப் பணிகள்; இன்று முதல் நிறுத்தம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலகப் பணிகள்; இன்று முதல் நிறுத்தம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலக பணிகள் அனைத்தும் இன்று தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளன. பல வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்வதை உடன் நிறுத்துமாறு மேலிடத்திலிருந்து  வந்த உத்தரவொன்றுக்கு அமைய, பதில் பொலிஸ்

மேலும்...
கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து,  அரசியல்வாதிகள் கூறுவதென்ன?

கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து, அரசியல்வாதிகள் கூறுவதென்ன?

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்