சஜித் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அந்த நெருப்பு அணைந்து விட்டதா?

சஜித் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அந்த நெருப்பு அணைந்து விட்டதா?

– மப்றூக் – ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, சஜித் பிரேமதாஸவை எதிர்ப்பின்றித் தீர்மானித்துள்ளது. இதனையடுத்து ‘அன்னம்’ சின்னத்தில் கூட்டணியமைத்து, ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, கூட்டணியின் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசமே செயற்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
500 மில்லியன் ரூபாவில் கல்முனை மாநகர சபைக்கு கட்டடம்: ஒப்பந்தம் கைச்சாத்து

500 மில்லியன் ரூபாவில் கல்முனை மாநகர சபைக்கு கட்டடம்: ஒப்பந்தம் கைச்சாத்து

நவீன முறையில் அமைக்கப்படவுள்ள சகல வசதிகளையும் உள்ளடக்கிய கல்முனை மாநகர மண்டபத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய இன்று வியாழக்கிழமை நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது. முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் முன்னிலையில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையில், கல்முனை

மேலும்...
சேர்ஃபிங் உலகப் போட்டித் தொடர், அறுகம்பேயில் கோலாகலமாக ஆரம்பம்: 25 நாடுகளைச் சேர்ந்த, நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு

சேர்ஃபிங் உலகப் போட்டித் தொடர், அறுகம்பேயில் கோலாகலமாக ஆரம்பம்: 25 நாடுகளைச் சேர்ந்த, நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு

ஆண்களுக்கான உலக கடலலைச் சறுக்கல் (சேர்ஃபிங்) தரப்படுத்தல் போட்டி (World Surf League Qualifying Series QSL3000) அறுகம்பேயில் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. இம்மாதம் 29ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டித் தொடரில் 25 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ்,

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; ரணில் விக்ரமசிங்கவே பிரேரிக்கவுள்ளார்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; ரணில் விக்ரமசிங்கவே பிரேரிக்கவுள்ளார்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரேரிக்க உள்ளார் எனத் தெரியவருகிறது. அமைச்சர் நவீன் திசாநாயக்க இதனை இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அலரி மாளிகைளில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்த வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார். செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னதாக, கட்சியின்

மேலும்...
ஓடாத குதிரையின் பந்தய கனவு

ஓடாத குதிரையின் பந்தய கனவு

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியைப் பிரதமர் ரணில் மேற்கொண்ட போதே,

மேலும்...
அலாவுதீனின் உருவ பொம்மையை எரித்து, பொத்துவில் ஆதார வைத்தியசாலை சமூகம் ஆர்ப்பாட்டம்

அலாவுதீனின் உருவ பொம்மையை எரித்து, பொத்துவில் ஆதார வைத்தியசாலை சமூகம் ஆர்ப்பாட்டம்

– மப்றூக் – கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீனுக்கு எதிராக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், பொதுமக்கள், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் இணைந்து, இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதோடு, அவரின் உருவ பொம்மையினையும் எரித்தனர். இதேவேளை பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும்

மேலும்...
போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ள, இந்திய செல்கிறார் தஸ்தகீர்

போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ள, இந்திய செல்கிறார் தஸ்தகீர்

– எஸ். அஷ்ரப்கான் – இந்தியாவில் நடைபெறும் போதைப் பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில்  கல்முனையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் எஸ். தஸ்தகீர் கலந்து கொள்ளும் பொருட்டு இன்று செவ்வாய்கிழமை இந்தியா பயணமானார். போதைப் பொருளுக்கு எதிரான உலக சம்மேளனம் – சுவீடன், போத்

மேலும்...
ஆட்டிப் படைக்கும் நிறைவேற்று அதிகாரம்: இல்லாதொழிப்பதில், இருக்கும் சிக்கல்கள்

ஆட்டிப் படைக்கும் நிறைவேற்று அதிகாரம்: இல்லாதொழிப்பதில், இருக்கும் சிக்கல்கள்

– சுஐப் எம். காசிம் – நாட்டின் அரசியலில் 1994 ஆம் ஆண்டிலிருந்து பேசப்படும் விடயத்தில் இது வரைக்கும் நிறைவேறாத ஒன்றுதான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்கும் முயற்சிகள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் இவ்விடயம் இதுவரைக்கும் நிறைவேறவில்லை. இதுதான் நிறைவேற்று அதிகாரத்தின் அகம்பாவம். பூனைக்கு யார் மணி கட்டுவது யார் (WHO TIED

மேலும்...
சஜித் பிரேமதாஸவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என, ஹக்கீம் தெரிவித்தமை தொடர்பில் கட்சிக்குள் விசனம்

சஜித் பிரேமதாஸவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என, ஹக்கீம் தெரிவித்தமை தொடர்பில் கட்சிக்குள் விசனம்

– அஹமட் – சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால், அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்தமை குறித்து, முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் விசனம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கவது என,

மேலும்...
சோள இறக்குமதி அனுமதிக்காக 50 மில்லியன் ரூபா ‘கொமிஷன்’ கோரிய அமைச்சர்

சோள இறக்குமதி அனுமதிக்காக 50 மில்லியன் ரூபா ‘கொமிஷன்’ கோரிய அமைச்சர்

ஐம்பதாயிரம் ஆயிரம் மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்காக, ஒரு கிலோவுக்கு ஒரு ரூபா வீதம் முக்கிய அமைச்சர் ஒருவர் ‘கொமிஷன்’ கோரியதாகத் தெரியவருகின்றது என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி குறித்த அமைச்சருக்கு 50 மில்லியன் ரூபா (05 கோடி) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, 80 ஆயிரம் மெட்ரிக்

மேலும்...