பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த வகையில், இலங்கை ஜனநாயக குடியரசின் 22 ஆவது பிரதமர் எனும் இடம் மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்திருந்தார். எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்த ஒருவர், இலங்கை

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதே, எனக்கு முன்னால் எஞ்சியிருந்த ஒரே தீர்வு: ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதே, எனக்கு முன்னால் எஞ்சியிருந்த ஒரே தீர்வு: ஜனாதிபதி

தன்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில், தன் முன்னால் எஞ்சியிருந்த ஒரே தீர்வு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்துவதேயாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது உயிரைப் பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில், ரணில்

மேலும்...
குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம், மைத்திரியை பதவி கவிழ்ப்பது சாத்தியமா: சட்ட விளக்கம்

குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம், மைத்திரியை பதவி கவிழ்ப்பது சாத்தியமா: சட்ட விளக்கம்

– எம். இத்ரீஸ் இயாஸ்தீன் (சட்டத்தரணி) – ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வந்து, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையினை ஐ.தே.கட்சி முன்னெடுப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி ஒருவரை எவ்வாறு பதவி நீக்கம் செய்யலாம், அது குறித்து அரசியலமைப்பு என்ன கூறுகிறது என்பது தொடர்பில்,

மேலும்...
புதிய அமைச்சரவையில் ரவி, ஆறுமுகன், டக்ளல் உள்ளிட்டோருக்கு பதவி

புதிய அமைச்சரவையில் ரவி, ஆறுமுகன், டக்ளல் உள்ளிட்டோருக்கு பதவி

புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் ரவி கருணாநாயக்க, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வே. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில், தற்போது அரசியல் அடுத்த என்ன நடக்கும் என்பது குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா சில தகவல்களை வழங்கியுள்ளார். அவை; 1. அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில்

மேலும்...
ரணிலின் பாதுகாப்பு, வாகனங்களை மீளப் பெறுமாறு, ஜனாதிபதி உத்தரவு

ரணிலின் பாதுகாப்பு, வாகனங்களை மீளப் பெறுமாறு, ஜனாதிபதி உத்தரவு

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் எனும் வகையில் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் வாகனங்களை உடனடியாக மீளப் பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான பாதுகாப்பினை மட்டுமே, ரணிலுக்கு வழங்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை 8.00 மணிக்கு முன்னர் அலறி மாளிகையிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம்

புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக இந்த நியமனத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமரின் புதிய செயலாளர் தனது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும்...
அலறி மாளிகையை 4.00 மணிக்கு முன்னர் ஒப்படைக்கவும்: அரசாங்கம் உத்தரவு

அலறி மாளிகையை 4.00 மணிக்கு முன்னர் ஒப்படைக்கவும்: அரசாங்கம் உத்தரவு

அலறி மாளிகையை ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அந்த வகையில், இன்று சனிக்கிழமை 4.00 மணிக்குள், அலறி மாளிகை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையை அடுத்து, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலறி மாளிகையில் ஐக்கிய

மேலும்...
பிரதமர் மஹிந்தவின் செயலாளராகிறார் லலித் வீரதுங்க

பிரதமர் மஹிந்தவின் செயலாளராகிறார் லலித் வீரதுங்க

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக லலித் வீரதுங்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ – ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருடைய செயலாளராக லலித் வீரதுங்க பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜனாதிபதியின் அதிகாரத்துக்கிணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளமையை, ஜனாதிபதி செயலகத் தரப்புக்களும் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலின்

மேலும்...
முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேண வேண்டும்: பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தல்

முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேண வேண்டும்: பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தல்

நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், முஸ்லிம் கட்சிகள் நடுநிலையாக இருக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது; நாட்டு மண்ணில் அதிகாரம் இடித்து நாட்டப்பட்டுள்ளது. இத்தருணத்தில் முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேணல் அவசியமாகும். இவ்வாறான நிலைமைகளில் சிறுபான்மைத்

மேலும்...
ஹக்கீம், றிசாட்; ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம்

ஹக்கீம், றிசாட்; ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம்

– அஹமட் – ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு, மு.காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. அலறி மாளிகையில் இன்று சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மேற்படி கட்சிகளின் தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தினர்.

மேலும்...