எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை 0
அரசாங்கத்தை விட்டும் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்களுக்கு எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, நாடாளுமன்ற செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16பேர், கடந்த 11ஆம் திகதி வாக்களித்திருந்தனர்.