வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்க, முதலமைச்சர் வகுத்த திட்டம்; மாகாணசபை உறுப்பினர் லாஹிரை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்

வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்க, முதலமைச்சர் வகுத்த திட்டம்; மாகாணசபை உறுப்பினர் லாஹிரை வைத்து ஆடிய நாடகம் அம்பலம் 0

🕔29.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – நீதிமன்ற உத்தரவினை கிழித்தெறிந்த வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுமாறு கோரி, திருகோணமலையில் நேற்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்து நடத்தியவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் எனத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு இணங்கவே, மேற்படி ஆர்பாட்டத்தினை

மேலும்...
சஊதியிலிருந்து இந்தோனேசியா பறந்த விமானம், இலங்கையில் அவசரமாக தரையிறக்கம்

சஊதியிலிருந்து இந்தோனேசியா பறந்த விமானம், இலங்கையில் அவசரமாக தரையிறக்கம் 0

🕔29.Apr 2017

சஊதி அரேபியாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானமொன்று, பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் அவசரமான தறையிறக்கப்பட்டது. மேற்படி விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டமையினாலேயே, விமானம் அவசரமாக தறையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் சுகயீனமடைந்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதியளிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 75 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம்

அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம் 0

🕔29.Apr 2017

முக்கியமான அமைச்சுக்களின் 06 செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் 15 தலைவர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பதவி நீக்கப்பட உள்ளனர் என தெரிய வருகிறது. செயலாளர்களை பதவி விலகுமாறு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை மன்றக்

மேலும்...
கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம்

கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம் 0

🕔28.Apr 2017

தொடர்பான செய்தி: நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

மேலும்...
நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Apr 2017

நீதிமன்ற உத்தரவை மதிக்காது கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணசபை அமர்வு கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, மாகாண சபைக்கு முன்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற

மேலும்...
கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை, ஐ.தே.க. கவனிக்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க

கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை, ஐ.தே.க. கவனிக்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க 0

🕔28.Apr 2017

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற வேண்டுமானால் கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை கவனிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அக்கட்சியுடன் இணைந்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

மேலும்...
நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம்

நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம் 0

🕔28.Apr 2017

நுரைச்சோலை நிலக்கரி மின்னிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், அப்பிரதேசத்தில் வாழும் சமூகங்களுடன் இலங்கை மின்சாரத்துறையின் தொழினுட்ப, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக, அந்த ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் அனல் மின்சார உற்பத்தி

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம்: சம்பந்தனும் ஹக்கீமும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

மாயக்கல்லி மலை விவகாரம்: சம்பந்தனும் ஹக்கீமும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு 0

🕔28.Apr 2017

– பிறவ்ஸ் –மாயக்கல்லிமலை விவகாரம் தொடர்பில், உரிய முறையில் ஆராய்ந்து அதற்கான பரிகாரம் காணும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாக, அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவினர் அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளனர்.இறக்காமம், மாணிக்கடு பிரதேசத்திலுள்ள மாயக்கல்லிமலை பிரதேசத்தில் நிலவிவரும்

மேலும்...
மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர பிரகடனம் தொடர்பில்,  சுயாதீன குழு அமைக்க ஜனாதிபதி தீர்மானம்

மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர பிரகடனம் தொடர்பில், சுயாதீன குழு அமைக்க ஜனாதிபதி தீர்மானம் 0

🕔28.Apr 2017

  மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர வர்த்தமனிப் பிரகடனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராயவென, சுயாதீன குழுவொன்றினை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்று, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த குழுவில் உள்ளடக்கும் வகையில் பெயர் குறிப்பிட்ட பிரதிநிதி ஒருவரை தந்துதவுமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம்

மேலும்...
ஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம்

ஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம் 0

🕔28.Apr 2017

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோவிடம், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அவ்வாறு விகாரை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித அதிகாரங்களும் தனக்கு இல்லை

மேலும்...